Home உலகம்கொரோனாவால் உலகில் 26½ கோடி பேர் பட்டினியை எதிர்நோக்குவர்

கொரோனாவால் உலகில் 26½ கோடி பேர் பட்டினியை எதிர்நோக்குவர்

by admin

கொரோனா பாதிப்பால் உணவு பாதுகாப்பின்மையால் ஏற்படும் பட்டினியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம், உணவு பிரச்சினை ஆகியவை குறித்து ஐ.நா. உலக உணவு திட்டம்,நேற்யைதினம் ஐ.நா. பாதுகாப்பு பேரவையிடம் சமர்ப்பித்த அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது

கொரோனா பரவலுக்கு முன்பே, 2019-ம் ஆண்டு, உணவு பாதுகாப்பின்மையால் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை, கொரோனா பாதிப்பால், நடப்பாண்டில் இரட்டிப்பாக அதாவது, 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

50 நாடுகளில், உணவு பிரச்சினையில் சிக்கி தவிப்போர் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தலா 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு மோதல்கள், பொருளாதார அதிர்வு, வறட்சி போன்ற வானிலை அம்சங்கள் காரணங்களாக இருக்கலாம்.

பொருளாதார பாதிப்பு அதிகரித்தால், இன்னும் 18 கோடி பேர், பட்டினி நிலைக்கு தள்ளப்படுவார்கள். இத்தகைய நிலைமையை தவிர்க்க எல்லோரும் கூட்டாக பாடுபட வேண்டும். என குறித்த அறக்கையில்p தெரிவிக்கப்பட்டுள்ளது  #கொரோனா  #பட்டினி  #ஐ.நா.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More