186
உலகம் உருண்டை அல்ல
தட்டையானது தான்.
அதிகார சபையில்,
கலிலியோ பின்வாங்கிய தருணம்.
உருண்டையான உலகம்
மீளவும் தட்டையாயிற்று.
கேலிகள் கிண்டல்கள்
எள்ளல்கள் ஏளனங்கள்
கெக்கலிப்புகள் கொக்கரப்புகள்
அதிர்ந்து வானில்
எகிறிய எக்காளம்.
காலாதி காலமும்
அதிகாரத் தலைமுறை முகங்களில்
சளிக்கட்டிய எச்சில்களாக,
வீழ்ந்தப்படியே.
எனினும்,
இன்னமும் சபைகள் அவர்களிடந்தான்.
உருண்டை உலகை
தட்டையாக்கும் அவர்களிடந்தான்.
சி.ஜெயசங்கர்.
Spread the love