பணப்பொய்கையில்
படுத்துறங்கும்மானிடர்
தச்சன், கொத்தனார்
எந்திரி, வர்ணம்பூசோன்
மின்இணைப்பாளர்
குழாய்பொருத்தினர்…
தொடரணிகொண்டு
மனைஅமைத்திடுவர்.
தனியனாய்இருந்து
காலிலும்சொண்டிலும்
குச்சினைகௌவ்வி
குடியிருக்கமனை
கருவிழிநிற
காகங்கள்அமைத்திடும்
நுண்ணியதாய்
நெழுநெழுவெனஊர்ந்து
மண்ணெடுத்து
மலைபோல்மனையினை
கறையான்கள்கட்டிடும்
கறுப்புதான்கலந்திடலாம்
குயிலின்நினைப்பு
காக்கையின்கூட்டில்
குயிலின்முட்டை.
பொந்துதான்புகுந்திடலாம்
பாம்பின்நினைப்பு
கறையான்புற்றில்
பாம்பு, உடும்பு.
வலிசுமந்தவன்இருக்க
வங்கனின்சௌக்கியஇருப்பு
யார்வீட்டுக்கு
யார்அதிபதி?
உரித்துடையோன்
உதறிவீசப்படும்நிலையிதுவா?
பிறர்வாழநம்உழைப்பு
பின்நலம்நமக்குநம்நினைப்பு
நம்வீட்டில்நாம்வாழ
நம்மைவிரட்டினால்
நாம்வெளியேறல்நியாயமோ?
நாம்வந்தேறுகுடிகளோ?
காகத்திற்கும்
கறையானுக்கும்
நீதிகொடுக்கும்
நீதிதேவதைஎங்கோ?
– வ. துசாந்தன் –