கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள சில சமூக விலகல் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு இறுதிவரை தொடர கூடும் என அந்த நாட்டின் தலைமை மருத்துவ ஆலோசகர் கிறிஸ் விற்றி (chris whitty ) தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று எதிர்பார்ப்பது முழுக்க, முழுக்க சாத்தியமில்லாதது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகவும் பயன்தரத்தக்க தடுப்பூசி அல்லது மருந்துகளே தற்போதைய சூழ்நிலையை மாற்றக் கூடியது எனவும் அது அடுத்த ஆண்டிற்குள் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் #பிரித்தானியா #சமூகவிலகல் #கொரோனா #தடுப்பூசி