293
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 638 பேர் பலியாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மரணங்களுடன் பிரித்தானியாவின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 18,738 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 4,583 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த எண்ணிக்கையுடன் பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138,078 ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. #பிரித்தானியா #மரணங்கள்
Spread the love