Home இலங்கைகொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்வு

by admin


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றுமட்டும் 38 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்த அவர் அவர்களில் நால்வர் கொழும்பு-12, பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள் எனவும் 29 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும்  தெரிவித்துள்ளார்.

வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த குறித்த 29 பேரும் ஜா-எல, சுதுவெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது  #கொரோனா #உயர்வு #வெலிசர #கடற்படைமுகாம்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More