கொரோனா வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு மாஸ்க், கையுறை, பிபிஇ என்றழைக்கப்படும் மருத்துவ பாதுகாப்பு சாதனம் போன்றவை முக்கியமாக தேவைப்படும் நிலையில், பிரித்தானியாவுக்கு மிகவும் எதிர்பாராத வகையில் ஓர் உதவி கிடைத்துள்ளது.
வியட்நாமை சேர்ந்த இரண்டு குழந்தைகள் சுமார் 20,000 மருத்துவ முகக்கவசங்களை பிரித்தானியாவுக்கு தானமாக வழங்கியுள்ளனர். வியட்நாம் தலைநகர் அருகே வசிக்கும் ஹான் மற்றும் கோய் என்ற அந்த குழந்தைகள் தாங்கள் பல ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தினைக் கொண்டு இந்த முககவசங்களை வாங்கியுள்ளனர்.
இந்த முகக்கவசங்கள் பத்திரமாக பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வியட்நாமுக்கான பிரித்தானியத் தூதுவர் கேரத் வார்ட் இந்த குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். #பிரித்தானியா #வியட்நாம்குழந்தைகள் #கொரோனா #முககவசங்கள்