202
மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு வாகன ஏற்பாடு இல்லாமையினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதி, மன்னார் பொது வைத்திய சாலைக்கு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு குறித்த தனியார் வைத்தியசாலையில் ஏற்பட்ட திடீர் மின் ஒழுக்கு காரணமாக குறித்த வைத்தியசாலை எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் , மருத்துவ கருவிகள் மருந்துகள் உட்பட பல இலட்சம் ரூபாய்பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த விபத்து ஏற்பட்டவுடன் உடனடியக செயற்பட்ட மன்னார் காவல்துறையினர், மன்னார் நகர சபையினர்,இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் பொது மக்களின் உதவியுடன் குறித்த பகுதியில் உள்ள தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ அணைப்பு ஏற்பாடு மன்னார் மாவட்டத்தில் இல்லாமையினால் மன்னார் நகரசபை மற்றும் காவல்துறையினரின் பௌசர்கள் மூலம் நீர் கொண்டு வந்து குறித்த விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
தீயணைப்பு வாகனம் இல்லாமையினால் இது வரை 10 மேற்பட்ட தீ விபத்துக்கள் கடந்த இரு வருடங்களுக்குள் மன்னார் மாவட்ட பகுதிகளில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. #மன்னார் #வைத்தியசாலை #தீக்கிரை
Spread the love