இலங்கை பிரதான செய்திகள்

T-56 ரக துப்பாக்கி மீட்பு விவகாரம் -பிரதான சந்தேக நபர் உட்பட மூவர் கைது

பாறுக் ஷிஹான்
 

துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபரின் வாக்குமூலத்திற்கமைய மேலும் 3 சந்தேக நபர்கள்  சம்மாந்துறை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சம்மாந்துறை  குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர்  முன்னெடுத்த தொடர்விசாரணையின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை(24) மாலை குறித்த மூவரும்  கைதாகினர்.

சுமார் 42, 40 மற்றும் 27 வயதினை உடைய இம்மூன்று சந்தேக நபர்களும் சனிக்கிழமை(25)  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில்  முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கைதான மூன்று சந்தேக நபர்களில் இருவர் குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டு அடிப்படையிலும் மற்றையவர் துப்பாக்கியை தன்வசம் உரிமையாக வைத்திருந்து பாதுகாத்தமை குற்றச்சாட்டிற்காகவும் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் பிரதான சந்தேக நபர் உள்ளடங்குவதாகவும் செங்கல் வாடி மற்றும் இறைச்சிக்கடை உரிமையாளர் எனவும் காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளது.இதேவேளை   துப்பாக்கி சூடு நடாத்தியவர் மற்றும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்ட  சந்தேக நபருக்கு சூட்டுபயிற்சி வழங்கியவர் என  சந்தேகத்தில்  இருவர்   ஏலவே சம்மாந்துறை காவல்துறையினரால்  கைதாகியமை குறிப்பிடத்தக்கது.    #துப்பாக்கி  #சம்மாந்துறை  #சந்தேகநபர்  #கைது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link