325
யாழ்ப்பாணம், ஆனைப்பந்தி – நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-68) என்பவரே உயிரிழந்தவராவார். உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தையடுத்து 1990 அம்புலன்ஸ் வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு அம்புலன்ஸ் வண்டி வந்த போதும் முதியவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.–
Spread the love