கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த முடக்கநிலை மே 4ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
7 வாரங்களுக்கு பின்னர் இந்த முடக்கநிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க முகக்கவசங்களோடு சிறு குழுக்களாக செல்லலாம் உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் பூங்காக்கள் திறந்திருக்கும் எனவும் பாடசாலைகள் ;செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் 260 பேர் மட்டுமே இறந்துள்ள நிலையில், கடந்த மார்ச் 14ம் திகதிக்குப் பின்னர் , இது தான் அந்நாட்டில் ஒருநாளில் நிகழ்ந்த குறைந்த அளவு மரணங்களாகும். இத்தாலியில் இதுவரை 26, 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன் இதுதான ஐரோப்பாவில் பதிவான அதிகமான உயிரிழப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது
அதேவேளை ஜெர்மனியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,018 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தில் இதே நாளில் பதிவான நோய்த்தொற்றை விட குறைவாகும் . ஜெர்மனியில் இதுவரை 1,55,193 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; 5,750 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜெர்மனியில் அமுலில் உள்ள முடக்க நிலையில் கடந்த வாரம் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று திங்கட்கிழமை முதல் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. #இத்தாலி #முடக்கநிலை #ஜெர்மனி #முகக்கவசம் #கொரோனா