180
மன்னாரில் மாற்றுத் திறனாளிகள் அமைப்பாளர் வெற்றிச் செல்வி கணிசமான வேலைத்திட்டங்கள் செய்து கொண்டு வருகின்றார்கள். அத்தோடு அவர்கள் குழுவாகவும் தனித்தனியாகவும் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்.
குறித்த தோட்டச் செய்கை பாரிய அளவில் வெற்றியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளை பொருத்த மட்டில் அவர்கள் தங்கள் சுய தொழிலை மேற்கொள்ளும் முகமாக இப்படியான தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் 522 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்
அவர்களில் சிலர் வீட்டுத்தோட்டம் , பலன் தரும் மரக்கன்றுகள் விற்பனை செய்தல் போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையில் தங்களது பொருட்களை தங்களது தேவைக்காக பயன்படுத்துவது மட்டுமில்லாது விற்பனை செய்யக் கூடியதாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன.
இந்த வகையில் மாற்றுத்திறனாளிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த தோட்டச் செய்கையில் இரசாயன பதார்த்தங்கள் ரசாயன உரங்கள் பயன்படுத்துவது இல்லை எனவும் இயற்கை உரங்களை தாங்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். உணவுகளை தாங்கள் உற்பத்தி செய்வதாகவும் உற்பத்தி செய்து தாங்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். #மன்னார் #மாற்றுத்திறனாளிகள் #தோட்டச்செய்கை
Spread the love