விவசாயி
ஆர்வம் துள்ளி
ஆசை மனதில் அள்ளிச்சொரிய
புறப்பட்டான் விவசாயி
விதையினை பூமியில் இட்டு
ஆத்ம திருப்தி கொண்டு
பராமரித்தான் விவசாயி
விதையின் முளை கண்டு மனம்
குளிர்ந்தான் விவசாயி
செடி வளர வளர நமக்கு
செம்மையான வாழ்வு தொடங்கியது
என்று மனம் மகிழ்ந்தான்
விவசாயி
நன்மைக்கே அனைத்தும் என
இருந்த பணத்தை போட்டான்
விவசாயி எண்ணெய் அள்ளி
சொரிந்தான் விவசாயி
பயிரே பயன்தர ஆயத்தமானது
மனமோ பார்த்து மகிழ்ந்தது
சத்திராதி வந்தது கொரோன
விவசாயிக்கு வறுமை ஏறி வெகுநாள்
செடியில் காய்த்த காய்கறிகள்
பழங்கள் அள்ளி சொரிந்தன
பார்த்த கண் எல்லாம்
செடிமேல் குவிந்தன.
ஆனால் பதறியது அவன் மனது
தவறியது விற்பனை கனவு
விற்பனைகோ இடம் இல்லை
அதை பெறுவதற்கோ மக்களிடம்
பணம் இல்லை
காய்கறிகள் அழுக அழுக
தேடி வந்தது விவசாயிக்கு
கடன்-கடன் மேல் கடன் வாங்கி
அவன் மேல் தொற்றியது-வறுமை
தேடியது ஓடியது சலித்தது
விவசாயி குடும்பமும் வறுமையின்
வலையில் பிடி கொண்டது
கதறி அழ கண்ணீர் உண்டு
வறுமையினை போக்க வழி
உண்டோ
சலித்தாலும் சாதனையினை
நிலை நாட்டுவதே
விவசாயி-அதுவே
அவனின் பெரும்
செயலோ
இந் நிலையில் சிந்தித்தான்
விவசாயி-கொடுப்பதே நம்
வழக்கம் கெடுப்பது அல்ல
தானம் விவசாயின் தர்ம
செயல் அல்லவா
விவசாயி புத்தியை தீட்டினான்
வறுமையிலும் கொடுப்பதே விவசாயி
என்பதினை உலகிற்கு
உணர்த்தினான்
இருந்தும் கொடுக்க சிந்திக்கும் சிலர்
இல்லாமல் இருக்கும் மக்களின்
துயர் போக்கி மனம்
குளிர செய்வதே இவன்
செயல்
கொடுப்பதில் விவசாயி வள்ளல்
அதிலும் கொரோனாவின் கொடுமையில்
அல்லல் படும் மக்களுக்கு
தானம் செய்யும் அவன்
செயலே- அரிய செயல்
அழுகியது அழுகட்டும் மீதி
அழுக முன் அல்லல் படும்
வறுமையின் வலையில் சிக்கிய
மக்களுக்கு அள்ளிக் கொடுப்பதே
விவசாயின் மகத்தான செயல்
அவன் வறுமை யார் அறிவார்?
அவன் பெருமை உலகறியட்டும்
அவன் வறுமை பாராது பிறர்
வறுமை போக்குவதே விவசாயின் பெருமிதம்
இ.கிருபாகரன்.
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.