Home இலக்கியம்எல்லா உலகும் சிறக்கும் அறிவு

எல்லா உலகும் சிறக்கும் அறிவு

by admin

 

எல்லா உலகும் சிறக்கும் அறிவு
எமதெனவே ஆக வேண்டும்

பாடசாலை போக வேண்டும்
பாடமெல்லாம் படிக்க வேண்டும்
வாழும் உலகம் வாழ வேண்டும்
படிப்பறிவு உதவ வேண்டும்

கணக்கு வழக்கு நுணுக்கம்  வேண்டும்
தாய்மொழியில் சிறக்க வேண்டும்
எம்மொழியும் எமக்கு வேண்டும்
எழுந்து நிமிர்ந்து செல்ல வேண்டும்

கற்பனையை வளர்க் கவேண்டும்
சிந்தனையைத் தூண்ட வேண்டும்
கேள்விகளை எழுப்ப வேண்டும்
விடைகள் தேடிச் செல்ல வேண்டும்

படைக்கும் ஆற்றல் கிடைக்க வேண்டும்
செயற்பாடு நடக்க வேண்டும்
உற்பத்திகள் செய்யும் அறிவை
உருவாக்கும் பள்ளி வேண்டும்

விரும்பிச் செல்லும் பள்ளி வேண்டும்
விளையாட்டாய் படிப்பும் வேண்டும்
எல்லா உலகும் சிறக்கும் அறிவு
எமதெனவே ஆகவேண்டும்

சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More