உலகம் பிரதான செய்திகள்

கொரோனா தொடர்பான அண்மைய தகவல்கள் – ஒரு பார்வையில்…. தமிழில் GTN

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது அமெரிக்காவில் 1 மில்லியனையும் தாண்டிச் செல்கின்றது.

ஜோன் கொப்கின்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின் படி, இதுவரை கொரோனாத் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்து விட்டதுடன் கொரோனாத் தொற்றினால் ஏற்பட்ட இறப்புகள் 57,000 இனையும் தாண்டிவிட்டது.

சீனாவில் ஏற்பட்ட இறப்புகளாக அறியப்பட்ட எண்ணிக்கையிலும் பிரேசிலில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இறந்தோரின்  எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

சீனாவில் கொரோனாத் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கையென உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் எண்ணிக்கையிலும் பார்க்க லத்தீன் அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய நாடான பிரேசிலில் கொரோனாவானால் ஏற்பட்டதென உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் அதிகமாகி விட்டன.

கடந்த 24 மணித்தியாளத்திற்குள் ஏற்பட்ட 474 உயிரிழப்புகளுடன் பிரேசிலில் கொரோனாத்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5017 ஆக உயர்ந்துள்ளது என பிரேசிலின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலகில் முதலில் தொற்று இனங்காணப்பட்ட சீனாவில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகள் 4643 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 586 இறப்புகள் புதிதாக ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் புதிதாக ஏற்பட்ட 586 இறப்புகளுடன் கொரோனாத் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புகளாக பிரித்தானிய மருத்துவமனைகளில் பதிவாகியுள்ள எண்ணிக்கை 21,678 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறைச் செயலாளாரான மாட் கான்கொக் தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசு இது தொடர்பாக தினசரி வெளியிடும் தகவல் சுருக்கத்தில், பேணகங்களிலும் சமூகத்திலும் புதிதாக ஏற்படும் இறப்புகள் குறித்த தகவல்களும் புதன்கிழமை முதல் வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

அறியப்பட்ட உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை 215,000 இனைத் தாண்டியுள்ளது.

ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, கொரோனாத் தொற்றுப் பரவலடைய ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை 30,90,844 பேர் உலகம் முழுவதிலும் கொரோனாத்தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் அதில் 2,15,063 பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்திருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது. இறப்புகள் குறித்து சரியாக அறிவிக்கப்படாமை, சரியான பதிவுமுறைகளின்மை மற்றும் தொற்றுக்குறித்த சோதனைகளில் இருக்கும் மாறுபாடுகள் போன்ற காரணங்களினால் மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் தொடர்பான எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்பட்டதொன்றாகவே இருக்கும்.

அவசரகாலநிலையை போர்த்துக்கல் முடிவிற்குக் கொண்டு வருகிறது

நாட்டில் அறிவிக்கப்பட்ட அவசரகாலநிலையானது இந்த வார இறுதியில் முடிவுக்கு வரும் என போர்த்துக்கல் ஜனாதிபதி மார்சிலோ றொபேலோ டி சொய்சா அறிவித்துள்ளார்.

மீண்டும் ஒருமுறை இந்த அவசரகாலநிலையை பிரகடணப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படாது என தாம் நம்புவதாக போர்த்துக்கல் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இயல்புநிலைக்கு மாறுவதற்கான திட்டத்தை ஸ்பெயின் வரைந்துள்ளது.

நாட்டில் ஏற்படும் தினசரி இறப்புகள் குறைந்து வருவதாலும், கொரோனாத்தொற்று வீதம் வீழ்ச்சியடைந்து வருவதாலும் நாட்டில் நடமாட்டங்களை முடக்குதல் தொடர்பான விபரங்களை மாற்றியமைப்பதாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு, அண்ணளவாக ஒவ்வொன்றும் இரண்டு வாரங்களிற்கு நடைமுறையில் இருக்கத்தக்கதான் நான்கு கட்ட நடமாட்ட முடக்கலைப் படிப்படியாகத் தளர்த்தும் திட்டத்தை ஸ்பெயின் அரசு ஏற்படுத்துகின்றது. ஆனால், மதுபாணக் கடைகளும் உணவகங்களும் எப்போது மீளத் திறக்க அனுமதிக்கப்படும் என்பது குறித்து ஒரு திகதியை இன்னமும் ஸ்பெயின் அரசு அறிவிக்கவில்லை.

பிரிட்டிஸ் எயார்வேய்ஸ்ஊழியர்கள் 12,000 பேர் பணிநீக்கத்தை எதிர்கொள்கின்றனர்.

கொரோனாத் தொற்றினால் உலகளவில் விமானப் போக்குவரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக தனது ஊழியர்களில் 12,000 பேரைப் பணிநீக்கம் செய்ய “பிரிட்டிஸ் எயார்வேய்ஸ்” திட்டமிட்டுள்ளது. “பிரிட்டிஸ் எயார் வேய்ஸ்” இனது வலுவான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கான அதனது 42,000 ஊழியர்களில் 1/4 பங்கிற்கும் சற்று மேலதிகமான எண்ணிக்கையான 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியுள்ளது என அதனது தலைமை நிர்வாகி அலெக்ஸ் குருஸ் தெரிவித்துள்ளார். #கொரோனா #அமெரிக்கா #உலகசுகாதாரநிறுவனம்  #பிரித்தானியா

(இந்தச் செய்திகள் “த கார்டியன்” இனால் தொகுக்கப்பட்டவை)  – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link