Home உலகம் பூமியை நோக்கி அசுர வேகத்தில் கிட்ட வந்து, மேலே கடந்து சென்றது QR2…

பூமியை நோக்கி அசுர வேகத்தில் கிட்ட வந்து, மேலே கடந்து சென்றது QR2…

by admin

ஒரு மைல் அகலமுள்ள ஒரு சிறுகோள் பூமிக்கு மேல நெருங்கி வந்து கடந்து சென்றது. இந்த கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  உலகமே கொரோனாவால் பெரும்பாதிப்பை சந்தித்து உயிரை காப்பாற்ற போராடி வரும் இந்த நேரத்தில் 1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி நாசாவால் கண்டுபிடிக்கப்பட்ட 1998 OR2 என அழைக்கப்படும் ஒரு சிறியகோள், சுமார் 3.9 மில்லியன் மைல் தொலைவில், மணிக்கு 19000 கிலோமீட்டர் வேகத்தில், பிரிட்டிஸ் நேரப்படி முற்பகல் 11 மணி அளவில் பூமிக்கு மேல கடந்த சென்றது.

இந்தக் கோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் தற்போதைக்கு இல்லை என்றும் ஏனெனில் பூமிக்கும் அந்த சிறிய கோளுக்கும் இடையே பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் இருப்பதால் பயப்பட தேவையில்லை என நாசா தெரிவித்தது. அத்துடன் பூமியில் இருந்து சந்திரனுக்கு இடையே உள்ள தூரத்தை 16 மடங்கு அதிகம் என்றும் நாசா தெரிவித்திருந்தது.

இதேவேளை, தனது ட்விட்டர் பக்கத்தில் நாசா சில தகவல்களை நேற்று இரவு பகிர்ந்தது. அதில் சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளது. இந்த பெரிய சிறுகோள் தவிர, ஒரு சிறிய சிறுகோள் பூமியை நோக்கி வந்தது. தற்போது கிரகத்திலிருந்து சுமார் 23,000 மைல் தொலைவில் (அதாவது 36,400 கி.மீ) உள்ளது அந்த சிறுகோள். அதற்கு 2020 ஹெச்எஸ் 7 என பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இதுபோன்ற சிறிய கோள்கள் ஒவ்வொரு மாதமும் பூமியைக் கடந்து சில நேரங்களில் மோதுகின்றன, ஆனால் அவை மோதியதும் அழிந்துவிடும் என்றும், இது ஒரு புவியியல் நடவடிக்கை என்றும் நாசா தெரிவித்துள்ளது.  இன்று புதன்கிழமை ஏப்ரல் 29 பிரிட்டிஸ் நேரப்படி பிற்பகல் 11 மணிக்கு கடந்து செல்லப்போகிறது எனவும். இது முற்பகல் 11மணிக்கு முன்னதாக பூமியைக் கடந்து பாதுகாப்பாக முன்னேறும் எனவும்,  இதனால் பூமிக்கு  எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்தது.

இந்த நிலையில், 1.2 மைல் அகலமுள்ள விண்வெளிப் பாறை என்று அழைக்கப்படும் இந்த சிறிய கோளின் வருகையை புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள அரேசிபோ ஆய்வகம் கண்காணித்து வந்தது. இந்த சிறுகோளின் சமீபத்திய படம் தூசி மற்றும் அதைச் சுற்றியுள்ள குப்பைகள் காரணமாக முகமூடியை அணிந்திருப்பதைப் போல தோற்றமளிப்பதாக விஞ்ஞானிகள் நகைச்சுவையாக கூறினார்கள்.

புவேர்ட்டோ ரிக்கோ ஆய்வகத்தின் கிரக ரேடார் தலைவர் டாக்டர் அன்னே விர்கி இதுபற்றி மேலும் கூறுகையில், “1998 OR2 சிறுகோளின் ஒரு முனையில் உள்ள மலைகள் மற்றும் முகடுகள் போன்ற சிறிய அளவிலான நிலப்பரப்பு அம்சங்கள் விஞ்ஞான ரீதியாக கவர்ச்சிகரமானவை. ஆனால் நாம் அனைவரும் கோவிட் -19 பற்றி யோசித்து வருவதால், இந்த அம்சங்கள் 1998 OR2 சிறு கோளை முகமூடி அணிந்து கொண்டு வருவது போல் தோற்றமளிக்கின்றன” என்றார். This Is What You Needed To Work From Home Hold My Laptop Millions Are Turning To This All Natural Solution For Joint canzon.com Don’t Turn Off Your Computer Without Doing This First Online Savers

குறிப்பாக  இந்த சிறுகோள் ஒரு PHO (அபாயகரமான பொருள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இது 140 மீட்டருக்கும் பெரியது மற்றும் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து ஐந்து மில்லியன் மைல்களுக்குள் வரும். ஆனால் கோளிடம் இருந்து எதுவும் கிரகத்திற்கு உடனடி ஆபத்தை ஏற்படுத்தாது. எனினும் 2020ம் ஆண்டுக்கு பிறகு அது எவ்வாறு நகரும் என்பதைப் பார்க்க விஞ்ஞானிகள் தொடர்ந்து சிறுகோள் மீது ஒரு பாரவையை வைத்திருக்கிறார்கள்.

3.5 மிக நெருக்கமாக வரும் புவேர்ட்டோ ரிக்கோ ஆய்வகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி ஃபிளேவியன் வெண்டிட்டி இதுபற்றி கூறுகையில், “பூமிக்கு எதிர்கால நெருக்கமான அணுகுமுறைகள் உட்பட, எதிர்காலத்தில் சிறுகோள் எங்கு இருக்கும் என்பதை ராடார் அளவீடுகள் இன்னும் துல்லியமாக அறிய அனுமதிக்கின்றன. 2079 ஆம் ஆண்டில், 1998 OR2 சிறுகோள் பூமியை இந்த ஆண்டை விட 3.5 மடங்கு நெருக்கமாக கடந்து செல்லும், எனவே அதன் சுற்றுப்பாதையை துல்லியமாக அறிந்து கொள்வது அவசியம் என்றார். “இந்த சிறுகோள் பூமியை பாதிக்கும் என்று கணிக்கப்படவில்லை என்றாலும், பாதிப்பு-அபாயத்தைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இந்த வகை சிறிய கோள்களின் பண்புகளைப் புரிந்துகொள்வது முக்கியம்” என்று கலாநிதி விர்கி தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More