பிரித்தானியாவில் இன்றுவரை கொரோனா வைரஸ் காரணமாக 26,097 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதன்முறையாக இன்று வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக, ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
முதன்முறையாக பராமரிப்பு இல்லங்கள் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட இறப்புகள் உட்பட்ட புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று, மருத்துவமனை இறப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 21,678 ஆக இருந்த நிலையில் இன்று குறித்த எண்ணிக்கையை 4,419 ஆல் அதிகரித்துள்ளது
இதனையடுத்து ஐரோப்பாவில் மிக அதிகமான இறப்பு விகிதங்கள் பிரித்தானியாவில் உள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த வாரம் பூட்டுதல் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படும்போது சில சமூக தொலைதூர கட்டுப்பாடுகளை நீக்குமாறு வலியுறுத்தப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. #பிரித்தானியா #கொரோனா #உயிரிழப்பு #புள்ளிவிவரங்கள்