129
நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம், மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு தொடர்ந்து, மே மாதம் 4 ஆம் திகதி காலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ஊரடங்கு
Spread the love