ரஸ்ய பிரதமர் மிக்கைல் மிஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் சோதனையில், தனக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தனது ஏனைய அமைச்சரவை உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக தான் சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள உள்ளதாகவும் பிரதமர் மிக்கைல் மிஸ்டின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஸ்யா 8-வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,498 ஆக உயர்ந்துள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,073 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 2,31,310 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனா வைரசால் 10 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது. #ரஸ்யா #கொரோனா #பிரதமர்