Home இலங்கைகலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது

by admin

எதிர்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பத்துடன் கடந்த 26ஆம் திகதி தனக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒன்றிணைந்த அறிக்கைக்கு நேற்று முன்தினம் (29) பதிலளித்துள்ள ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஸ   கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாதென தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர் தேர்தல் நடத்தத் தேவையில்லை என சிந்திப்பதாக தெரிகிறது என்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தி இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு முழு அரச இயந்திரமும் அர்ப்பணிப்புடன் உள்ள சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ ஜயசுந்தர அவர்களின் கையொப்பத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் செயலாளர் அவர்களினால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதம் வருமாறு.

 

2020 ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி

கௌரவ சஜித் பிரேமதாஸ

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்

 

கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களே,

எதிர்க்கட்சியின் ஒன்றிணைந்த அறிக்கை,

2020.04.26ஆம் திகதி மேற்படி தலைப்பில் உங்களினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துக்கள் குறித்த அறிக்கை தொடர்பானது.

அவ்வறிக்கையின் படி தெரியவருவதாவதுஅறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர் தேர்தல் நடத்துவது தேவையில்லை என்றும்கொவிட் 19 வைரஸ் தொற்றுடன் மக்களின் சுகாதாரசமூக பாதுகாப்புநலன் பேணலுக்கு முழு அரச இயந்திரமும் அதிக பட்சம் கவனம் செலுத்தியுள்ள இச்சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும்கொவிட் 19 நோய் நிவாரணத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரஏனைய அரச சேவைகள்முப்படையினர்பொலிஸ் மற்றும் தனியார் துறையினரின் பெரும் தியாகசிந்தையுடனான பணிகளை மதிக்காமையுமாகும் என்று மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் அறியத்தர விரும்புகின்றேன்.

பாராளுமன்றம் கலைக்கப்படுவது அதன் 5வருட கால நிறைவில் அல்லது ஜனாதிபதி அவர்களினால் கலைக்கப்படும் சந்தர்ப்பத்திலாகும் என்றும்அந்த வகையில் 2020 மார்ச் மாதம் 02ஆம் திகதி மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாகவும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு கலைக்கப்பட்டமை நீங்கள் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள அனைத்து தரப்பினரினதும் ஏற்புடனும் மேற்படி பாராளுமன்ற கலைப்பு பற்றிய அறிவித்தலின் செல்லுபடியாகும் தன்மை உறுதியாவதாகவும் அறிவிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் எனக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது என்றும், 2020.03.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்ட பாராளுமன்றத்தை கலைக்கும் அறிவித்தலின் படி 2020.04.25 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 2020.06.20ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்குமாறு எனக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்அரசியலமைப்பின் 70(7) படி செயற்படுவதற்கான தேவை எழவில்லை என்றும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் உங்களுக்கு அறிவிக்குமாறு எனக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

 

இவ்வண்ணம் – உண்மையுள்ள,

பி.பீ ஜயசுந்தர

ஜனாதிபதியின் செயலாளர்

 

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More