186
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன் கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னாரில் உள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ)கட்சியின் தலைமை அலுவலகத்தில் டெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளரும், மன்னார் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ரி.மோகன்றாஜ் தலைமையில் மாலை 3.30 மணியளவில் நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நினை வேந்தல் நிகழ்வின் போது தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஸ்ரீ சபாரத்தினத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
-அதனைத்தொடந்து மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,கட்சியின் முக்கியஸ்தர்கள்,உறுப்பினர்கள் தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #ஸ்ரீசபாரத்தினம் #நினைவேந்தல் #தமிழ்ஈழவிடுதலைஇயக்கம்
Spread the love