169
- கொரோனா வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.ஆனால், இந்த விசாரணைகள் அறிவியல்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும், அரசியல் ரீதியில் இருக்கக்கூடாது என்றும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 10,669 பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றோடு தொடர்ந்து 6-வது நாளாக ரஷ்யாவில் ஒரேநாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- கொரோனா வைரஸ் பாதிப்பால், மிகவும் தொழில்வளம் மிக்க ஜெர்மனியில் மார்ச் மாதத்தில் ஏற்றுமதிகள் 11.8 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. 1990-ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய இரண்டும் இணைந்த பின்னர் முதல்முறையாக தற்போது தான் ஜெர்மனியின் பொருளாதாரமும், ஏற்றுமதியும் கொரோனா பாதிப்பால் பெரிதும் சரிந்துள்ளன.
- கோவிட் 19 பெருந்தொற்று என அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் 9 மாதங்களில் இந்தியாவில் 2 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என ஐநாவின் குழந்தைகள்நல அமைப்பான யுனிசெஃப் மதிப்பீடு செய்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனாவில், 1.35 கோடி குழந்தைகள் பிறக்கக்கூடும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.இன்று தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய லாவ் அகர்வால், இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை எனத் தெரிவித்தார்.
- இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 29.36 சதவீதமாக உள்ளது.
- இதுவரை இந்தியாவில் 216 மாவட்டங்களில் ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகவில்லை.
- தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் ஒன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் புதிதாக 600 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது.
- நன்றி – பி.பி.சி தமிழ்…
Spread the love