177
சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல், இலங்கையின் மேல் மாகாணத்தில் தங்கியிருப்போரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் சிக்கியுள்ள சுமார் 1000 பேர் இன்று முற்பகல் கல்கிஸ்ஸ பகுதியிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இவர்கள் அனுப்பபபட்டனர். இதற்கு முன்னரும் இது போன்று சொந்த இடங்களுக்கு ஒரு தொகுதி மக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love