146
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது. COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் நேற்றிரவு அடையாளங் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளானோரில் 586 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, நேற்றைய தினத்தில் 8 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Spread the love