எழுவது முதல் விழுவது வரை அன்றாடம் நம் செயல்பாடுகளில் அறிவியலின் பயன்பாடு நீக்கமற நிறைந்திருப்பதில் எத்துணையும் ஐயமில்லை. அறிவியலின் பிரயோகம் இல்லையேல் மனித வாழ்க்கை இல்லை எனும் நிலைக்கு இன்று அறிவியல் உலக சமூகங்களை ஆக்கிரமித்துள்ளது. விழித்தவுடனேயே தேவைப்படும் நீர் முதல் உறக்கத்தின் போது தேவைப்படும் கொசு, மூட்டைப்பூச்சி நீக்கிவரை அறிவியல் கண்டுபிடிப்புக்கள்; இல்லாமல் எந்த நாளும் கழிவதில்லை. இவற்றின் எண்ணிக்கை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்கிக் கொண்டே செல்கின்றது. கல்லை உரசி நெருப்பைக் கண்டுபிடித்த அன்றைய நாள் முதலே மனிதனது அறிவியல் தேடல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இத்தகைய தேடலின் விளைவால் உருப்பெற்றதே இன்றைய அறிவியல் உலகு. அறிவியல் என்பது இன்று உலகையே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு அபரீத வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய அறிவியலின் வலைக்குள் அகப்படாதவை எவையும் உலகில் இல்லையெனலாம். இந்நிலையிலே சமூகம் இதற்கு விதிவிலக்காக அமைந்து விடமுடியாது.
சமூகம் என்பது பல்வேறுபட்ட நிறுவனங்களையும், கலாசாரக் கூறுகளையும் உள்ளடக்கிய ஒரு பாரிய கட்டமைப்பு. இது பல்வேறு இன, மத. மொழி, கலாசார அடிப்படையில் வேறுபடும் மனிதர்களை உள்ளடக்கியது. மானிதர்களாகப் பிறந்த எவராலும் எக்காலத்திலும் தனித்து வாழ முடியாதல்லவா எனவேதான் தமது பாதுகாப்பின் பொருட்டும் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டும் பிறருடன் சார்ந்து கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினர். இவ்வாறான வாழ்க்கை முறையின்பால் உருப் பெற்றதே மனிதகளின் சமூகம். இத்தகைய சமூகத்தின் வளர்ச்சி நிலையில் அறிவியலுக்கு பெரும் பங்குண்டு.
அன்று குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வீடுகளை அமைத்தும் வேட்டையாடி உணவு உண்டும் எளிமையான வாழ்க்கை முறையை வாழ்ந்த மனிதர்களின் சமூகம். நாகரிக வளர்ச்சியின் அடிப்படையில் இன்று விண்வெளியில் வீடுகளை அமைத்து வாழும் வாழ்க்கை முறையைக் கொண்ட சமூகமாக மாற்றம் பெற்றுள்ளது என்;;றால் இதற்கு அறிவியலின் பயன்பாடும் செல்வாக்குச் செலுத்தியுள்ளதை நாம் மறந்துவிடலாகாது. இவ்வாறாக சமூகத்தின் வாழ்க்கைப் படிநிலையின் பரிணாம வளர்ச்சியில் அறிவியல் செல்வாக்;கு செலுத்தியுள்ளதை அன்றைய அறிஞர்களது கூற்றுக்கள் எடுத்துரைக்கின்றன.
மனிதன் ஆதிகாலத்தில் வாழ்ந்த முறைக்கும் இப்பொழுது வாழும் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதற்கான காரணம் அறிவியல் முன்னேற்றங்கள்தான் என்று கூறினால் அது மிகையாகாது. ‘பறவையைக் கண்டான,; விமானம் படைத்தான், எதிரொலி கேட்டான், வானொhலி படைத்தான்’ இக்கூற்;றிற்கேற்ப காலந்தோறும் அறிவியலாளர்கள் பலர் தோன்றிப் பல புதுமைகளைப் படைத்து வந்துள்ளனர். அதன் விளைவுகள்தான் இன்று நாம் காணும் வானொலியும், தொலைக்காட்சியும், கணினியும், இயந்திர மனிதனும் ஆகும். இவற்றைப் போன்ற கண்டுபிடிப்புகளால் நாம் இன்று பல சாதகமான விளைவுகளை சந்தித்திருக்கின்றோம். அதே சமயத்தில் பாதகமான விளைவுகளை சந்திக்கவில்லை என்று கூறிவிடமுடியாது.
வானொலி, தொலைக்காட்சி ஆகியவை மனிதர்களுக்குப் பல வகைகளிலும் நன்மை புரிந்துள்ளன. மனிதர்களின் அறிவை மேம்படுத்தவும், உடனுக்குடன் செய்திகளைப் பரப்பவும், மொழி கற்பிக்கவும் மனிதர்கள் உல்லாசமாகப் பொழுது போக்கவும் உதவியிருப்பதை நாம் மறக்க இயலாது. ஆயினும் இவற்றில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் சில ஆபாசமானவையாகவும், வன்செயலைத் தூண்டுபவையாகவும் அமைந்துள்ளன. இதனால் மனிதர்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே ஒழுக்கக்கேடு ஏற்பட்டிருக்கின்றது.
இன்றைய நவீன உலகில் தொழிற்சாலைகள் இல்லாத நாடே இல்லை எனக்கூறும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கணினி, இயந்திர மனிதன் போன்ற சாதனங்களின் அறிமுகத்தால் இன்று தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறன் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இச்சாதனங்கள் தொழிற்சாலையில் மட்டுமல்லாமல் பள்ளிகள், பொருளகங்கள், விமான நிலையங்கள், ஏன் நம்மில் சிலரது வீடுகளில் கூடப் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவியல் கண்டுபிடிப்புகளால் மலர்ந்த துணி துவைக்கும் இயந்திரம், குளிர்சாதனப் பெட்டி, மின் அடுப்பு, மின் விசிறி போன்றவை நம் வாழ்க்கையை சிரமமின்றி நடத்தத் துணைபுரிகின்றன. அதுமட்டுமன்று நாம் எல்லோரும் உணவில்லாமல் கூட உயிர் வாழ்ந்துவிடுவோம் ஆனால் இக்கருவிகள் இல்லாவிடின் நம் வாழ்க்கையே பாலைவனம் ஆகிவிடும். இருந்தாலும் இக்கருவிகளால் பல தீமைகளும் ஏற்பட்டுவருகின்றன என்பது கண்கூடு. ஏனெனில் மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் இத்தகைய கருவிகளை மனிதர்கள் மிகவும் நம்பியிருப்பதால் இக்கருவிகள் இல்லையென்றால் வாழ்க்கையே சீர்கெட்டுவிடும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
அறிவியல் வளர்ச்சி இன்றைக்கு விண்ணைத் தொட்டுவிட்டது எனலாம். நம் வாழ்வின் எல்லாத் துறைகளையும் அறிவியல் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றது. ஒரு காலத்தில் நாம் விளக்கெரிக்க எண்ணெயைப் பயன்படுத்தினோம். அதற்கென ஓர் எண்ணெயை தயாரித்து அதற்கு விளக்கு எண்ணெய் என்று பெயரிட்டோம். இன்று விளக்கெண்ணெய் விளக்கைக் காண இயலாது. இதற்கு பதில் இன்று சிறு பட்டி, தொட்டி கிராமங்களில் கூட பளிச் சென்று மின்விளக்கே ஒளி வீசுகின்றது.
உழவுக்கும், தொழிலுக்கும் அறிவியல் துணைபுரிகின்றது. நிலத்தை உழுவதற்கும், உரத்தை இடுவதற்கும் வேளாண்மை பண்ணைகள் பெருகுவதால் இயந்திரங்களின் உதவியால் ஆழ்கிணறுகள் தோண்டி, நீர் நிலைகளைப் பெருக்கி பசுமை மாட்சியை இன்று காணமுடிகின்றது. ஆதி மனிதர்களும் தமக்கு எட்டிய அறிவியல் சிந்தனைகளின் அடிப்படையிலே அக்காலத்து பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதாவது கோடைப் போகம், மாரிப் போகம் என்று காலநிலை பற்றிய தமது அறிவினைக் கொண்டு காலத்திற்கு ஏற்பவும் இருவாட்டி மண், மணல் மண் என மண்ணின் தன்மைகளை இனங்கண்டு அவற்றிற்கு ஏற்பவும் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அக்காலத்திலும் அவர்களிடம் அறிவியல் செல்வாக்குச் செலுத்தியள்ளது. ஆனால் இன்று இவற்;றினை அறிவியலாக கருதுவதை விட மேற்குலகு கண்டுபிடித்து உலகுக்களித்த பல விடயங்களையே நமது சமூகங்கள்; அறிவியல் கண்டுபிடிப்புகள் என கொண்டாடுகின்றன.
ஆதிகாலத்தில் மனிதர்கள் பறவைகளின் இறகுகளை கூர்மைப்படுத்தி அவற்றினைக் கொண்டு பனை ஓலைகளிலும், ஏடுகளிலுமே எழுதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று மனிதர்கள் பேனா எனும் கருவியைக் கொண்டு தாள்களில் எழுதுகின்றனர். இதனை வாட்டர்;மென் என்னும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். இவரது கண்டுபிடிப்பு இன்றைய சமூகங்களில் அறிவியல் கண்டுபிடிப்பாக பெருமளவில் பேசப்படுவதைப் போன்று ஆதிமனிதர்களது கண்டுபிடிப்புக்கள் பெருமளவில் பேசப்படுவதில்லை என்பது வருந்தத்தக்க விடயமாகும். இவ்வாறான நிலைப்பாடு தொடருமானால் ஆதிமனிதர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை எதிர்கால சமூகங்கள் கற்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாது போய்விடும் என்ற அடிப்படையிலே நான் இவ்விடயங்களைப் பற்றி அழுத்திக் கூறுகின்றேன்.
அன்று கால்நடையாகவும், கட்டை வண்டியிலும் பல மயில் தேசங்களுக்கும் சென்று வந்த மனிதர்கள் சிறந்த உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்டவர்களாகவும் வாழ்ந்தனர். ஆனால் இன்று உந்துருளிகளிலும், ஊர்திகளிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தமது பயணங்களை மனிதர்கள் மேற்கொண்டாலும் அவர்களால் சிறந்த ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக இன்றைய மேலை நாகரிகம் காண்பித்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை விட நமது ஆதி மனிதர்களது அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வாழ்வியலில் நல்ல பல விடயங்களையே அள்ளி வழங்கியுள்ளன. இருந்தும் கூட இவற்றின் தாற்பரியங்களை இன்றைய சமூகம் மறந்ததேனோ?
இதுபோன்று விரைவில் உணவை சமைக்கும் அழுத்த குக்கர்கள், குளிர்கருவிகள் தோசை, இட்லிக்கு மாவாட்ட வேண்டுமானால் அதற்கு பயன்படும் அரைக்கும் எந்திரங்கள்; முதலியன அன்றாட வேலைகளின் நேரத்தையும், உடல் உழைப்பையும் குறைக்கின்றன. இவற்றினால் மனிதர்களது வேலைகள் இலகுபடுத்தப்பட்டமை மனிதர்களுக்கு நன்மையளிப்பதாக இருந்த போதிலும் இன்று பல தீர்க்க முடியாத நோய்களுக்கும் ஒரு பகுதி காரணமாக இவை அமைவதை மனிதர்கள் பெரிதும் சிந்திப்பதில்லை. ஆனால் அன்றைய மனிதர்கள் மண்ணாலான அடுப்புகளிலும், பாத்திரங்களிலும் உணவு சமைத்தும், அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றில் அரைத்தும் பல உணவுகளை உண்டு நோயில்லா வாழ்வை வாழ்ந்தனர். இவ்வாறான வாழ்வியலிலும் செல்வாக்கு செலுத்தியது அறிவியலே எனலாம்.
மேலும் ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்’ என்பது போலச் சிலருக்கு இன்பத்தை அளிக்கும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் கோடிக்கணக்;கான மனிதர்களுக்கு பெருந்துன்பத்தை இழைக்கின்றன. ஆம்! அவை தாம் அணுவாயுதங்கள். ஒப்பன் ஹைம்மரால் கண்டுபிடிக்கப்பட்ட அணுகுண்டு;. 1945 இல் ஹிரோஷpமா, நாகாசாகி ஆகிய நகரங்களை அழிப்பதற்குப் பயன்பட்டது. அந்த நகரங்களை மட்டுமல்லாமல் அவ்வணுகுண்டு அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களையும் துடைத்தொழித்துக் கொன்றதை நாம் மறந்துவிட முடியாது. இத்தகைய அழிவு வேலைகளை விடுத்து ஆக்க வேலைகளுக்காக மாத்திரம் இவற்றினைப் பயன்படுத்துமாறு உலக மக்கள் சமூகம் இன்று குரல் கொடுத்து வருகின்றது.
அறிவியல் சமூகத்திற்கு வழங்கிய தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது இன்று உள்ளம் கையில் உலகம் எனும் நிலையினைத் தோற்றுவித்துள்ளது. இதன்படி இன்று உலகின் பல எல்லை நிலைகளில் காணப்பட்ட கிராமிய சமூகங்களும் பூகோள கிராமமாக மாற்றம் பெற்றுள்ளதை அனைவரும் அறிவோம். இன்று உலகின் எந்தவொரு சமூகத்திலும் நடைபெறுகின்ற நிகழ்வுகள், போர்கள், நோய்கள் போன்ற விடயங்களை அனைத்து மனித சமூகமும் அடுத்த நொடி அறிந்து கொள்ள முடிகின்றது என்றால் இதற்குக் காரணம் நிச்சயமாக மனித சமூகத்தின் மீதான அறிவியலின் செல்வாக்காகவே இருக்க முடியும். இவ்வாறாக இன்றைய சமூகங்களின் தொடர்பாடலை அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கிரமித்துள்ள போதிலும் ஆதி மனிதன் பயன்படுத்திய பறவைகள் மூலமான தொடர்பாடல் முறையானது இன்றும் இந்தியாவில் சில மாநிலங்களில் காணப்படுகின்றதை நாம் மறந்துவிட முடியாதல்லவா.
அறிவியலில் விண்ணைத் தொடும் அளவிற்கு உச்ச வளர்ச்சி கண்ட மனிதர்கள். ‘மனிதத்தை இயற்கையால் வெல்ல முடியாது’ என்று எண்ணி இயற்கை மீது செல்வாக்குச் செலுத்தி பல்வேறு வழிகளிலும் அதனை கட்டுப்படுத்தினர். இதனால் இயற்கையில் காணப்பட்ட பல்வேறு வளங்களையும் சுரண்டி தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தனர். (உதாரணமாக மரம் வெட்டுதல், இரத்தினக் கல் அகழ்தல், காடழிப்பு) இதனால் மனிதர்கள் இயற்கையை தாம் வென்று விட்டதாக பெருமிதம் கொண்டனரே தவிர இயற்கை அவர்களுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களை(உதாரணமாக நிலநடுக்கம், மண்சரிவு, வெள்ளப் பெருக்கு, வெப்பம்) உணர்ந்து கொள்ள வில்லை.
மேலைப் பண்பாடுகளை கையில் எடுத்த மனிதர்கள் மேலை நாட்டவரின் உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கவும் தவறவில்லை. அதன்படியே இன்று நம்மவரில் பலரும் மகஉஇ pணைணயஇ டியசபநசஇ ளயனெறiஉh போன்ற உணவுகளை பழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். இவ்வாறு உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமானது தொடர்ச்சியாக பண்பாட்டிலும் துரித மாற்றத்தை ஏற்படுத்தியது. (உதாரணமாக விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களால் பாடப்பட்ட கிராமியப் பாடல்கள், மேற்கொள்ளப்பட்ட சடங்குகள் என்பவை கைவிடப்பட்டன, பண்டிகை விழாக்களின் போது சிற்றூண்டிகள் தயாரித்து அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழ்ந்த வாழ்வியல் முறை மாற்றத்திற்குள்ளானது இது போன்று இன்னும் பல விடயங்கள் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.) இந்நிலை தோற்றம் பெற அறிவியலின் செல்வாக்கும் ஒரு காரணமே எனலாம்.
அறிவியல் மருத்துவத்தில் ஏற்படுத்திய செல்வாக்கினால் இன்று எதற்கும் வைத்தியசாலையை நாடும் வழக்கமே காணப்படுகின்றது. நவீன அறிவியல் கண்டுபிடித்த மருந்துகளையே இன்றைய நவீன சமூகங்கள் பெரிதும் விரும்புகின்றன. இந்நிலையில் இன்று உலக சமூகங்களையே ஆக்கிரமித்துள்ள கொரனா வைரஸ்சை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் எதனையும் நவீன அறிவியலால் தந்துவிட முடியவில்லை. இதற்கென பண்டைய மனிதன் பயன்படுத்திய மருந்து மூலிகைகளையே இன்று உலக சமூகங்களும் பயன்படுத்துகின்றன. மேலும் அன்றைய மனிதர்கள் ஒரு குழந்தையை பிரசவிப்பதைக் கூட வீடுகளிலே மேற்கொண்டுள்ளனர் என்றால் அவர்களது அறிவியல் சிந்தனை எவ்வளவு தூரம் வளர்ச்சியடைந்தது என்பதை நாம் ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்று மனிதத்தை இயற்கையால் வெல்ல முடியாது என்ற எண்ணப்பாட்டிலே மனிதர்கள் வாழ்கின்றனர். எனினும் இத்தகைய எண்ணப்பாட்டில் வாழ்ந்த மனிதர்களுக்கு சவால் விடும் வகையிலே பல விடயங்களை இயற்கை இன்று மனிதர்களுக்கு வழங்கி வருகின்றது. இதனால் மனிதர்கள்; பெருமிதம் கொள்ளும் இத்தகைய எண்ணப்பாடு பொய்ப்பித்து விடுமோ? என்ற எண்ணச் சிந்தனையே இன்று நம்மவரில் பலருக்கும் தோன்றுகின்றது. எனவே எவ்வாறு காணப்படினும் சமூகத்தின் வளர்ச்சிப் பாதையில் செல்வாக்குச் செலுத்திய அறிவியலானது இன்று மனிதர்களது வாழ்வியலில்; எந்தளவுக்கு சாதகமான பல விடயங்களை வழங்கியுள்ளதோ அதேயளவு பல பாதகங்களையும் உண்டுபண்ணியுள்ளதை எவராலும் மறுக்க இயலாது.
உ.நித்தியா