2020 பிறந்தும்
2019 ஓய்ந்த பாடில்லை
ஏப்ரல் 21 ஐ மறந்தும்
டிசம்பர் 19 ஐ மறந்த பாடில்லை
மாந்தர் வளமைகள் வலுவிழந்தன,
மாந்தர் கொள்கைகள் கொடியிழந்தன,
மாந்தர் நடத்தைகள் நடையிழந்தன,
மாந்தர் ஊர்திகள் ஓய்வெடுத்தன,
மாந்தர் அகங்காரம் ஓய்ந்தொடுங்கின.
இயற்கை இயல்புகள் இடம் விரைந்தன,
இயற்கை இயம்புதல் இசை பாடின,
இயற்கை யிடங்களும் இசைந்தாடின,
இயற்கை மலைகளும் மறை திறந்தன,
இயற்கை மரங்களும் தீ துறந்தன,
இயற்கை தீர்த்தங்கள் இதமாகின,
இயற்கை விலங்குகள் விலங்குடைத்தன.
மறைத்த மரபுகள் மடமை திறந்தன,
மறந்த வளமைகள் பழக்கமாயின,
மறந்த நேயங்கள் யாவும் வெளித்தன,
மறந்த மறைவுகள் மடைகள் உடைத்தன,
மறைந்த மனிதரில் ஞான மெழுந்தன.
மாந்தர் வளமைகள் மறுபடி கிழம்பும்
மாந்தர் நடத்தைகள் திரும்பவும் திரும்பும்
மாந்தர் கொள்கைகள் விரைந்துமே பரவும்,
இயற்கை இயல்புகள் இயலாமை காணும்,
இயற்கை மரங்களும் தீயுண்டு சாகும்,
இயற்கை விலங்குகள் விசங்கண்டு விறைக்கும்,
இயற்கை வளிகளும் அமிலங்கள் காவும்,
இயற்கை வெளிகளும் புகையாண்டு மறையும்,
இயற்கை இருப்புக்கள் இடமின்றி தகரும்.
இக்கொடுங்காலம் என்றோ மறைந்துமே போக
இம்மனிதர்கள் இவைகள் மீளவும் செய்வர்.
க.பத்திநாதன்
சு.வி.அ.க. நிறுவகம்
கிழக்குப் பல்கலைக்கழகம்.