161
சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய பொதுமக்கள் செயற்படுகின்றார்களா என்பதை அவதானிக்கும் முகமாக இன்று கொழும்பில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த நடவடிக்கையை நாடு முழுவதும் விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. #கொழும்பில் #விசேடசோதனை #சுகாதார
Spread the love