தமிழினப் படுகொலையின் 11ஆவது நினைவுநாளைதமிழ் தேசம் எதிர்வரும் மேமாதம் 18ஆம் திகதிஅனுட்டிக்கவுள்ளது. ஆழமாகிவரும் இராணுவமயமாக்கல், அச்சுறுத்தும் கொரோனோவுக்கு மத்தியில் நாம் இம்முறை இந்தநினைவுநாளை அணுக வேண்டியுள்ளது.
பொறுப்புக்கூறல் போராட்டம் இந்ததலை முறையோடு முடிவடையாது என்பதும் தலைமுறை கடந்ததாக அமையும் என்பதும் எமக்கு கடந்த வருடம் உணர்த்தியபாடங்கள். நீண்ட, தலைமுறை கடந்த நீதிக்கான போராட்டத்திற்கான நிறுவனம் சார் ஏற்பாடுகளையும் கட்டமைப்புசார் செயற்பாடுகளையும் நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த போராட்டத்திற்கு தேவையான கூட்டு உள வலிமையையும் ஓர்மத்தையும் நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
முள்ளிவாய்க்கால் அவலத்திற்குப் பின் பிறந்த ஓர் தலைமுறைஎமதுதாயகத்தில் வளர்ந்துவருகின்றது. அந்ததலை முறைக்கு எமதுதேசத்தின் வரலாற்றையும் போராட்டத்த்தின் வரலாற்றையும் நாம் அனுபவித்த அனுபவிக்கும் ஒடுக்குமுறையையும் பற்றிசொல்லிக் கொடுக்கவேண்டும். அந்த ஒடுக்குமுறையோடு வாழப் பழகாதிருக்க, அவ்வொடுக்குமுறையிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிவகைகளை நாம் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அவ்வாறான தற்காப்பு பொறிமுறைகளில் ஒன்று நினைவேந்தல்களை முறையாக ஒழுங்கமைத்துக் கொள்வது.
அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் ஏலவே கோரப்பட்டுள்ளவாறு இந்தமுறை நாம் நினைவேந்தலை எமது இல்லங்களில் இருந்து ஆரம்பிப்போம். பின்வரும் மூன்று செயற்பாடுகளில் தாயகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரும் இணைந்து கொள்ளவேண்டும் என அன்புரிமையுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவோடு இணைந்து கேட்டுக் கொள்கின்றோம்:
1. மே 18 2020 அன்று இரவு 7 மணிக்கு வீடுகளில் தீபங்கள் ஏற்றிமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரல்.
2. மே 18 2020 அன்றுஎமதுமக்கள் போரின் இறுதிநாட்களில் உட்கொண்டகஞ்சியைஅன்றையதினம் ஒருவேளையேனும் உணவாகாராமாக்கிக் கொள்ளல்.
3. மே 18 2020 அன்றுஇரவு 7 மணிக்குஅனைத்துவணக்கத்தலங்களிலும் விசேடமணிஒலிஎழுப்பிபேரவலத்தைநினைவேந்தல்.
இத்தகைய செயற்பாடுகள் நினைவேந்தலை சமூகமயப்படுத்த உதவும் எனநாம் நம்புகிறோம். எமக்குள் என்றும் நீங்கா அந்தநினைவு விளக்கை தூண்டிவிட அனைவரும் கரம் கோர்ப்போம்.
நன்றி
(ஒப்பம்) (ஒப்பம்)
அருட்பணி வீ. யோகேஸ்வரன்
கலாநிதி. குமராரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர்
தமிழ் சிவில் சமூகஅமையம்
Tamil Civil Society Forum
29.04.2020