Home இலங்கை தொழிலுக்கு செல்லும் தனியார் – அரச துறையினர் வாடகை வாகனங்களை பயன்படுத்தலாம்..

தொழிலுக்கு செல்லும் தனியார் – அரச துறையினர் வாடகை வாகனங்களை பயன்படுத்தலாம்..

by admin

தனியார் மற்றும் அரச துறையினர் தொழிலுக்கு செல்லும்போது முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாடகை வாகனங்களை போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியும் என காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.

தொழிலுக்கு செல்வோர், தனியாரினால் முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,  தொழிலுக்கு செல்வோர் பயன்படுத்தும் வாடகை வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும், காவற்துறை  பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொழிலுக்கு செல்வோருக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் தனியாருக்கு எதிராக ஊரடங்கு சட்ட விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் காவற்துறை  ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More