Home இலங்கைமட்டக்களப்பு கல்லடியில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்..

மட்டக்களப்பு கல்லடியில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்..

by admin

மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டின் பின்புறமாக வருமாறு நேற்றிரவு 7.30 அளவில் (15.05.20) தொலைபேசி அழைப்பு கிடைத்தபோது, அந்த இளைஞர் அங்கு சென்றுள்ளார். எனினும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சகோதரனால் தேடப்பட்ட போது, அந்த இளைஞர் வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்து கிடந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இளைஞர் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரவு 9.50 அளவில் உயிரிழந்துள்ளார். உயிரழந்தவர் கல்லடி வேலூர் 4ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச்  சாரதியான 29 வயதுடைய இராமசந்திரன் மனோரதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அண்மையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலின்   தொடர்ச்சியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து மட்டு போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்ப ட்டுள்ளதுடன் இருவரை சந்தேகத்தில் இன்று (16.05.20) அதிகாலை கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்

காத்தான்குடி காவற்துறையினர்  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More