177
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் நகர சபையின் அமர்வின் போது தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்னார் நகர சபையின் 27 ஆவது அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை(18) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையில்,மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த மக்களுக்கு தீபம் ஏற்றப்பட்டு பின்னர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி இடம் பெற்றது. மேலும் நகர சபையின் தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்கள் கருப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. #முள்ளிவாய்க்கால் #அஞ்சலி
Spread the love