133
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜாவிற்கும், முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினருக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை(19) மதியம் 12 மணியளவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன் போது சமகால நிலவரம் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
கலந்துரையாடலின் பின்னர் போராட்டத்தை விமர்சித்ததாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கண்டன அறிக்கையினை முன்னாள் போராளிகள் மக்கள் அமைப்பினர் கையளித்தனர்.
Spread the love