224
யாழ்.காங்கேசன்துறை வீதியில் கம்பங்களை நடும் பணியில் ஈடுபட்டிருந்தவர் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதால் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொலைத்தொடர்பு கம்பிகளை இணைப்பதற்காக கம்பங்களை நடும் பணியில் அந்நிறுவனத்தில் ஒபந்த அடிப்படையில் வேலை செய்யும் நபர் பாரம் தூக்கி ஊடாக கம்பத்தை நட முயன்ற போது உயர் மின்னழுத்த கம்பிகளை கம்பம் தொடுகையிட்டதால் மின்சாரம் கடத்தப்பட்டு , பாரம் தூக்கிய இயக்கிய நபரையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கியதால் பாரம் தூக்கியை இயக்கிய நபர் தூக்கி வீசப்பட்டார். அவரது உடலில் பல இடங்களில் எரிகாயங்களும் காணப்பட்டன. மின்சாரம் தாக்கப்பட்ட நபர் அங்கிருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமக்கு எவ்வித அறித்தலும், வழங்காது கம்பங்களை நடமுயன்றதால் தான் ஆபத்து ஏற்பட்டதாக மின்சார சபையினர் தெரிவித்தனர். #காங்கேசன்துறை #மின்சாரம்
Spread the love