156
போதை பொருளை மீட்க வாய்க்குள் கைவிட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் கை விரல்களில் கடி வாங்கியுள்ளார். வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் போதை பொருள் வியாபாரம் நடைபெறுவதாக நேற்று இரவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து அவ்விடம் விரைந்திருந்தனர்.
அவ்வேளை அங்கிருந்த இளைஞன் ஒருவர் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கவே காவல்துறையினர் அவனை துரத்தி பிடித்தனர். அதன் போது அவன் தன் உடமையில் இருந்த போதை பொருள் பக்கெட் ஒன்றினை விழுங்குவதற்காக வாய்க்குள் போட்ட போது விரைந்து செயற்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அவனின் வாய்க்குள் கைவிட்டு போதை பொருளை மீட்க முயற்சித்துள்ளார்.
அதன் போது அவன் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரின் கை விரல்களை கடித்துள்ளான் இருந்த போதிலும் காவல்துறையினர் விடாது அவன் வாய்க்குள் போட்ட போதை பொருள் பக்கெட்ட மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து குறித்த இளைஞனை கொண்டு சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #காவல்துறை #போதைபொருள் #வல்வெட்டித்துறை
—
Spread the love