159
இந்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 1,12,359 பேர் இந்தியா முழுவதும் கோவிட்- 19 தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய எண்ணிக்கையைவிட நேற்று மட்டும் கூடுதலாக 5,609 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 132 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,435 ஆக உள்ளது. இதுவரை 45,299 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று உண்டானபின் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். தற்போது 63,624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Spread the love