சிங்கப்பூரில் முதன்முறையாக சூம் வீடியோ மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கடந்த 2011-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த 37 வயதான புனிதன் கணேசன். ஏன்பவர் ஹெரோயின் போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
சிங்கப்பூரில் அளவில் போதை பொருள கடத்தலுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டங்கள் இங்கு கடுமையான உள்ளன. அந்தவகையில் புனிதன் கணேசன் மீதான வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சூமசூ வீடியோ மூலமாக, புனிதன் கணேசனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்கள் வீடியோ கொன்பரன்ஸ் வழியாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிங்கப்பூர் வரலாற்றிலேயே சூம் கால் வழியாக ஒரு குற்ற வழக்கில் மரண தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும். அதே வேளை சூம் வீடியோ கால் வழியாக தண்டனை விதிக்கப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் புனிதன் கணேசன் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். #சிங்கப்பூர் #சூம்வீடியோ #மரணதண்டனை