வடக்கு , கிழக்கு மாகாணங்களில் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் எனவும் அவர்களுக்கு உரிய வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் சிரேஸ்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் தெரிவித்துள்ளனர். அலரி மாளிகையில் நேற்று (21) பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
வட மாகாணத்தில் 26 பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாடப்படுகின்ற போதிலும் அவர்களுக்கென மைதானத்துடன் ஓர் ஆடுகளம் மாத்திரமே உள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜயவர்தன வடக்கு கிழக்கில் யுத்தத்தின் பின்னர் அங்கு திறமை வாய்ந்த பிள்ளைகள்இ சிறந்த வீரர்கள் உள்ள போதிலும் அவெர்களுக்கென வசதிகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அது தொடர்பில் நமக்கும் பொறுப்புள்ளது என்றே தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார். #வடக்கு #கிழக்கு #கிரிக்கெட் #மகிந்த