பிரேசிலில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளார். பிரேசிலில் இருந்து வரும் பயணிகளை அமெரிக்காவிற்குள் அனுமதித்தால், அங்கு மேலும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக அவர் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூவை எப்போதும் வெளிப்படையாக பாராட்டும் டிரம்ப் இவ்வாறான அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பிரேசில் ஜனாதிபதி; சயீர் பொல்சனாரூ நிலைமையை தீவிரமாக கருத்தில் கொள்வதில்லை எனவும் அண்மையில் அவர் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களை முக கவசம் அணியாமல் சந்தித்து கலந்துரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது #பிரேசிலில் #அமெரிக்கா #பயணிகள் #தடை #கொரோனா