198
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்றையதினம் வாக்குமூலம் ஒன்றை பெறவுள்ளனர். கடந்த மார்ச் 16ம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்றால் மூவர் உயிரிழந்தனர் என தவறான தகவலை வெளியிட்டமை தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
தலாஹேனவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #சரத்பொன்சேகா #குற்றப்புலனாய்வு #வாக்குமூலம் #கொரோனா
Spread the love