உலகம் பிரதான செய்திகள்

கொரோனா இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும்


கொரோனா வைரஸ் இந்த ஆண்டிறுதிக்குள் 8½ கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகமெங்கும் சுமார் 200 நாடுகளில் 57 லட்சத்து 16 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளதுடன் உயிரிழப்பும் 3 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் போட்ட ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கி உள்ளதுடன் வாழ்வாதாரங்கள் பறி போய் உள்ளன.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப்பும், மனிதாபிமான அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பும் இணைந்து மேற்கொணடஆய்விலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் 8 கோடியே 60 லட்சம் குழந்தைகளை இந்த ஆண்டிறுதிக்குள் வறுமையில் தள்ளும் எனவும் இதன்மூலம் வறுமையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை15 சதவீத்தால் அதிகரித்து 67 கோடியே 20 லட்சமாக உயரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கு குழந்தைகள் சகாரா ,ஆபிரிக்கா, தெற்காசியா பகுதிகளில் வாழ்கின்றனர் எனவும் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் மிக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 44 சதவீதமானோர் இந்த நாடுகளில் உள்ளனர எனவும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 22 சதவீத அதிகரிப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் இதுவரை இல்லாத அளவில் சமூக பொருளாதார நெருக்கடிகளை தூண்டி உள்ளது. இது உலகெங்கும் உள்ள குடும்பங்களுக்கான வளங்களை வடிகட்டுகிறதென இந்த ஆய்வு முடிவுகளையடுத்து யுனிசெப் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஹென்ரிட்டா போர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு கொள்கைகளால் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் தாக்கம் 2 மடங்குக்கு இருக்கும் என யுனிசெப்பும், சேவ் தி சில்;ரன் அமைப்பும் எச்சரித்துள்ளன.

உடனடி வருமான இழப்பு என்பது குடும்பங்கள் உணவு மற்றும் நீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை பெறுவதற்கான திறனைக் குறைத்து விடும் எனவும் கல்வி மற்றும் சுகாதார சேவைகளை நாடுவதற்கான வாய்ப்புகள் குறையும் எனவும் தெரிவித்தக்கட்டுள்ளது. அத்துடன் குழந்தை திருமணம், வன்முறை, சுரண்டல், துஷ்பிரயோகம் ஆகியவற்றின் ஆபத்து அதிகரிக்கும் எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. #கொரோனா  #ஆண்டிறுதி  #குழந்தைகள்  #வறுமை  #யுனிசெப்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap