162
99 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருக்கு எதிராகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று முற்பகல் சிறிகொத்தவில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #நாடாளுமன்றஉறுப்பினர்கள் #கட்சிஉறுப்புரிமை #இடைநிறுத்தம் #ஐக்கியதேசியகட்சி
Spread the love