Home இலங்கை முகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்

முகநூல் காதலியை பார்க்க வந்த இளைஞன் கடத்தி தாக்கப்பட்டார்

by admin

முகநூல் காதலியை சந்திக்க வந்த இளைஞனை காவல்துறையினர் என கூறிய இளைஞர் குழுவொன்று கடத்தி சென்று,  தாக்கி இளைஞனின் கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இச் சம்பவம் கொக்குவில் பொற்பதி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
ஆவரங்கால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் முகநூல் ஊடாக பழகியுள்ளார். அந்த பழக்கம் சிறிது காலத்தில் காதலாக மாறி இருவரும் காதலித்துள்ளனர்.
இந்நிலையில் , இருவரும் இன்றைய தினம் கலட்டி சந்திக்கு அருகில் உள்ள குளிர் பான நிலையத்தில் நேரில் சந்தித்து பேசுவதாக தீர்மானித்துள்ளனர்.
இருவரும் தீர்மானித்த நேரத்தின் படி குறித்த இளைஞன் அப்பகுதியில் யுவதிக்காக காத்திருந்துள்ளார். அவ்வேளை மூன்று மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர் குழுவொன்று , தம்மை  காவல்துறையினர் என கூறி சந்தேகத்திற்கு இடமான முறையில் இவ்விடத்தில் நிற்பதனால்  காவல் நிலையம் கொண்டு சென்று விசாரிக்க வேண்டும் என கூறி இளைஞனை மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக இழுத்து ஏற்றி அங்கிருந்து பொற்பதி பிள்ளையார் ஆலயத்திற்கு பின்புறமாக கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரது தொலைபேசியையும் பறித்து . மணிப்பையில் (பேர்ஸ்) பணத்தினையும் பறித்துள்ளனர். அதன் போது குறித்த இளைஞன் எதிர்ப்பு காட்டவே இளைஞனை மோசமாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அவ்விடத்தில் இருந்து குறித்த கும்பல் தப்பி சென்ற பின்னர் தலையில் காயத்துடன் இரத்தம் வழிந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆலயத்தின் முன்புறமாக வீதிக்கு வந்த போதே வீதியால் சென்றவர்கள் இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய்  காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து காவல்துறையினர்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #முகநூல் #இளைஞர்குழு #கைத்தொலைபேசி  #கொக்குவில்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More