பரந்து விரிந்திருக்கும் இப்பாரினிலே உள்ள ஒவ்வொரு தனிமனிதர்களும் இறைவனால் படைக்கப்பட்ட தனித்துவமானதும், மகத்துவமானதும், தெய்வீகமானதுமான பிறவிகளாகும். இப்பிறவியிலே உள்ள மனிதர்களாகிய நாம் வாழ்க்கை எனும் புத்தகத்திலே ஒவ்வொரு அத்தியாயங்களையும் விரும்பியோ விரும்பாமலோ வாழத்தலைப்பட்டுள்ளோம். அதனடிப்படையிலே இவ் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொன்றும் எமக்கு வௌ;வேறு நிலைகளிலே நின்று தகுந்த பாடத்தை கற்பிக்க தவறுவதில்லை. நாமும் அதை கற்றே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்த நிலைக்குள்ளேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். யாரும் எதையுமே தவிர்த்துவிட முடியாது. எது நடக்க வேண்டும் என்று விதி எழுதப்பட்டுள்ளதோ அது நடந்தே ஆகின்றது. இதிலிருந்து நாம் யாருமே தப்பித்துவிடவும் முடியாது.
இவ்வாறாகவே வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டங்களையும் கடக்கும் வேளைகளிலே பல்வேறு விதமான பிரச்சினைகள், வௌ;வேறு விதமான மனிதர்கள், விசித்திரமானதும் விநோதமானதுமான நிகழ்வுகள், மனதிற்குப் பிடித்தமான இன்பங்கள்;, ரணமாய் கொல்லும் துன்பங்கள் கலையாத எதிர் பார்ப்புக்கள், தேடலின் பொக்கிஷங்கள், நிலைகுலையவைக்கும் தோல்விகள் இவ்வாறாக பட்டியல் நீளும் அளவிற்கு மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றுமே இணைந்துதான் இவ்வாழ்க்கை எனும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையிலே மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ‘வாழ்க்கை’ என்ற பதத்தை நன்கு உணர்ந்திருத்தல் மிகமிக அவசியமானதொன்றாகும். நம்மில் பெரும்பாலானோர் எண்ணுகின்றோம் நாம் நினைப்பதெல்லாம் நல்லவிதமாக மட்டுமே நடந்துவிட வேண்டும் என்று. நம் எண்ணத்தில் தவறில்லை. ஆனால் சில சமயங்களில் துரதிஷ;டவசமாக அவ்வாறு நடக்;காத வேளைகளிலே நாம் சொல்லணாத் துயரத்திலே துவண்டு விழுந்து உழலுகின்றோம், அதிலிருந்து மீள முடியாது தவிக்கின்றோம், சரி இத்தோடு எல்லாமே முடிந்துவிட்டது என்றவாறு உணர்கின்றோம். இவ்வாறான எண்ணங்கள் யாவுமே தவறானவையாகும்.
இதனை விடுத்து ஒவ்வொரு தோல்விகளும், பின்னடைவுகளும் எமக்கு சரியான பாதையை வகுத்து சென்றிருக்கின்றன என்பதை நாம் முதலில் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தோல்விகள், பின்னடைவுகளிலிருந்து நாம் வாழ்க்கையில் வெற்றிபெற கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவ்வாறு கற்றுக் கொள்ளாவிட்டால் அந்த சந்தர்ப்பத்தில்தான் நாம் வாழ்க்கையில் தவறுவிடுகின்றோம், தோல்வியடைகின்றோம். தோல்விகளிலிருந்து முதலில் கற்றுக் கொள்ள பழக வேண்டும். அவற்றின் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக ஒவ்வொரு தனியனும் தனக்குரிய வாழ்க்கையை முதலில் தான் வாழ முயற்சி செய்ய வேண்டும். அடுத்தவர்களின் விருப்பு வெறுப்பிற்காக நான் வாழ முடியாது என்ற நிலைப்பாட்டை முதலில் நமக்குள் கொண்டுவர வேண்டும். அவ்வாறானதொரு வாழ்க்கையை நாம் வாழ தலைப்பட்டோமாயின் ஒவ்வொருவருக்காகவும் ஒவ்வொரு நிலைமைகளிலும் நாம் வேடம் தரிக்க வேண்டியவர்களாகவே இருப்போம். எனவே எமது வாழ்க்கையிலே சந்திக்கின்ற ஒவ்வொரு தோல்விகளையும் அதனால் பெற்றுக் கொள்ளும் அனுபவங்களையும் ஏற்றுக் கொண்டு அதன்படி எமது எதிர்கால வசந்த வாழ்வை செம்மைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அதே போன்று எந்தவொரு சூழ்நிலையிலும் நமக்கென இருக்கின்ற தன்மானத்தை இழந்துவிடக்கூடாது. அது மனதிற்கு பிடித்த உறவென்றாலும் சரி வேறு எந்தவொரு விடயமாயினும் சரி எமக்கென்று ஓர் சுய கௌரவத்தை நாம் ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்தல் கூடாது. எமது வாழ்க்கையில் சந்திக்கின்ற எந்தவொரு சவால்களையும் எதிர்ப்பதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும். அதனை வெல்வதற்கும் உரிய மிகப் பெரிய ஆயுதம் எமது மனம் மட்டுமேயாகும். இது பலமாக உள்ளவரை எந்தவொரு பிற விடயத்தாலும் எம்மை வீழ்த்திவிட முடியாது. இவ்விடயத்தை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றைப் போலவே எம்மைப் படைத்த இறைவனுக்கு எம் வாழ்வை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது நன்கு தெரியும். எனவே அதற்கு ஏற்றவகையிலே எமக்கு தகுதியானவை அனைத்தும் தகுந்த நேரத்தில் எம்மை வந்து சேரும் எனவே எமது எதிர்கால வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என நாம் தினம் தினம் எண்ணவேண்டும். அது அவ்வாறே நல்ல முறையில் அமையப்பெறும். இதனைத்தான் ‘எண்ணம் போல் வாழ்க்கை’ எனும் கூற்று உணர்த்துகின்றது. எது எவ்வாறு இருந்த போதிலும் ‘விதி’ என்ற ஒன்றை மட்டும் எதனாலும் மாற்றிவிட முடியாது. என்பதை மனதிற்கொண்டு எமக்கான எதிர்கால வாழ்வை நோக்கிய வெற்றிப் பயணத்தை துணிவுடன் தொடருவோம்.
வாழ்க்கை என்பது ராட்டினம் போன்றதாகும். இன்பம், துன்பம், வறுமை, செல்வம் போன்ற எல்லாமே மாறி மாறி வரும் இவற்றுக்கு நாம் மட்டும் விதிவிலக்கல்ல. எனவே இவையனைத்தையும் உணர்ந்து ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற கூற்றை மனதில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் இலக்கு நோக்கிய நமது வாழ்க்கைப் பயணத்திலே வரும் துன்ப துயரங்களை எதிர்த்து துணிவுடன் பயணித்து உரிய இலக்கினை அடைய வேண்டியது அவசியமாகும்.
உ.நித்தியா