உயிர்த்துடிப்பான உலக இருப்பின் ஊற்றுக்கண்களில், தேனீக்களின் இருப்பு முக்கியமானது. உயிர்ப்பினதும், உருவாக்கத்தினதும், வடிவமாகவும், குறியீடாகவும் இருப்பவை தேனீக்கள்.
தேனீக்கள் கலைப்பொருள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம், உள்ளுர்க் கலைவளங்களினதும், கலை ஆக்கத்திறத்தினதும் வடிவமாகவும் குறியீடாகவும் திகழும் வகை உருவாக்கப்பட்டிருக்கிறது.
உள்ளுர் வளங்களில் உலகம் வியக்கும் வகையில் கலையாக்கத்திறம் வளர்த்தெடுக்கப்பட்டுவரும் கலைப்பண்பாட்டுச் செயற்பாட்டுச் சூழலில், தேனீக்கள் கலைப்பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் முக்கியத்துவ மிக்க களமாக இயங்கத் தொடங்கி இருக்கின்றது.
கலையாக்க வல்லபமும் சமுக நோக்கும் கொண்ட கீதாநந்தி நிர்மலவாசனின் திட்டமிடலிலும், உருவாக்கத்திலும் அவரது ஆக்கங்களை முதன்மையாகக் கொண்டு தேனீக்கள் கலைப் பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையம் மயிலம்பாவெளி, திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ளது.
காட்சிப்படுத்தல்களுக்கும், அன்பளிப்புகளுக்கும் பயன்பாட்டுக்குமான கலைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும் விருப்பத்திற்கும் தேவைக்குமுரிய வகையில் உருவாக்கிப் பெற்றுக் கொள்ளவும் மயிலம்;பாவெளி, திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள தேனீக்கள் கலைப் பொருள் உருவாக்க மற்றும் விற்;பனை நிலையம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளுர் வளங்களில், முழுக்க, முழுக்க கைகளால் உருவாக்கப்படும் தனித்துவமான கலைப்பொருட்களைக் காண்பதற்கும், வாங்குவதற்கும் வடிவமைத்துப் பெற்றுக் கொள்வதற்குமான கலை நிலையமாக தேனீக்கள் கலைப் பொருட்கள் உருவாக்க மற்றும் விற்பனை நிலையம் இயங்கத் தொடங்கியுள்ளது.
அனைத்துவிதமான சமுகப் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்குமான அன்பளிப்புப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், காட்சிப் பொருட்கள், அறிவியல் மாநாடுகள் கருத்தரங்குகளுக்கான காகிதாதிகள் நினைவுப் பரிசில்கள் என்பவற்றுடன் அணிகலன்;கள், அலங்காரப் பொருட்கள், வாழ்த்து அட்டைகள், பைகள், சிற்பங்கள், ஓவியங்களெனப் பலவகையான கலைப் பொருட்களின் உருவாக்கக் களமாகவும், விற்பனை நிலையமாகவும் தேனீக்கள் இயங்கத் தொடங்கியுள்ளது.
இவற்றுடன் மூன்றாவது கண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாடுகளுக்கான நண்பர்களின் பதிப்புகளான பலவகைப்பட்ட நூல்களையும் தேனீக்களில் பெற்றுக் கொள்ளலாம்.
உள்ளுர் வளம், உள்ளுர்ப் படைப்புத் திறம் உலகங்களின் பார்வைக்கும் பயனுக்கும்! தேனீக்கள்; எங்கள் கைகள் எங்கள் வளங்களில் விளைவிக்கும் அழகு!
சி.ஜெயசங்கர்.