Home சினிமா இளம் இசையமைப்பாளர் கொரோனாவினால் பலி

இளம் இசையமைப்பாளர் கொரோனாவினால் பலி

by admin


‘வாண்டட்’, ‘தபாங்’, ‘ஏக் தா டைகர்’, ‘தேவி’ படங்களுக்கு இசையமைத்த பிரபலமான இசை இரட்டையர்களான சஜீத்-வஜீத் ஆகியோரில் ஒருவரான, இசையமைப்பாளர் வஜீத் கான் (42 வயது) கொரோனா பாதிப்பால் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

1998 ஆம் ஆண்டு வெளியான சல்மான் கானின் ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ திரைப்படத்தின் மூலம் பொலிவூட்டில் அறிமுகமான சஜீத்-வஜீத் இருவரும் சல்மான் கானின் பல்வேறு வெற்றிப்படங்களான கார்வ், தேரே நாம், தும்கோ நா பூல் பேயங்கே, பார்டனர் மற்றும் மிகவும் பிரபலமான தபாங் சீரிஸ்களில் பணியாற்றியிருந்தார்கள்.

மேலும் ரவுடி ரத்தோர், தமிழில் பிரபு தேவா நடித்த தேவி(சல் மார் பாடல்) ஆகிய படங்களுக்கும், ஐபிஎல் சீஸன் 4 தீம் மியூசிக் உட்பட முக்கியமான கலை நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும்; இசை அமைத்திருந்தார்கள்.
துள்ளல் இசைக்கு பெயர் பெற்ற இவர்கள் முன்னணி நடிகர்களின் மாஸ் படங்களுக்கு இசை அமைப்பதில் பெயர் பெற்றவர்கள்.

இந்த இசை இரட்டையர்களுள் ஒருவரான வஜீத்(சஜீத்தின் சகோதரர்) சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மாற்று அறுவை சிகிச்சையும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் உடல் நலக்கோளாறால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று(ஜூன் 1) அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது #இசையமைப்பாளர்   #கொரோனா #வஜீத்கான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More