202
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பில் இருந்து யாழ்.நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கனகராயன் குளம் பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோ
குறித்த விபத்தில் மட்டக்களப்பு காவல்நிலையத்தில் கடமையாற்றும், நல்லூர் அரசடி வீதியை சேர்ந்த ஜெயமூர்த்தி நிஷாந்த் மற்றும் அவரது நண்பரான யாழ்ப்பாணம் பலாலி வீதியை சேர்ந்த நிஷாந்த் ஜானுசன் ஆகியோ ரே உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர் யாழில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , விபத்துக்கு உள்ளான இரு வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளதாகவும் கனகராஜன் குளம் காவல்துறையினர்தெரிவித்தனர். #மோட்டார்சைக்கிள் #வவுனியா #விபத்து #யாழ்ப்பாணம்
Spread the love