முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராம அலுவலர் பிரிவில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மே31 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த யுவதியின் சடலமே இன்று காலை கிணறு ஒன்றில் காணப்பட்டநிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டவர் அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் கொலையா, தற்கொலையா என கண்டறியும் நோக்கில் விசாரணைகள் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. #முல்லைத்தீவு #காணாமல்போன #யுவதி #மீட்பு