உலகம் முழுவதிலும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.92 லட்சத்தைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசினால் உயிரிழந்தோர்; எண்ணிக்கை 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ளதுடன் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 66.92 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிபபுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 32.41 லட்சத்தைத் தாண்டியுள்ள அதேவேளை சிகிச்சை பெறுபவர்களில் 55 ஆயிரத்து 480-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக காணப்படும் அமெரிக்காவில் இதுவரை 19 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து, அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக பிரேசில், ரஸ்யா, ஸ்பெயின் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது #உலகம் #கொரோனா #உயிரிழப்பு