பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் அண்மைக்காலமாக கொரோனா அனர்த்த காலங்களில் குற்றச் செயல்களில் அதிகமாக ஈடுபட்டு வருகின்றார்கள். எனவே அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவ்வாறானவர்கள் திருந்தி ஏனையவர்களுக்கு உதாரணமாக இருக்க சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கல்முனை காவல்துறை நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரி ஏ. எல். முஹம்மட் ஜெமில் தெரிவித்தார்.
கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (5) ஆலய உண்டியல் திருட்டு இஒலி பெருக்கி துவிச்சக்கரவண்டி போன்றவற்றை திருடி வந்த இளைஞர்களை எச்சரித்து ஆலோசனையுடன் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில்
நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் நீங்கள் திருந்தி வாழ ஆசைப்பட்டால் அல்லது தொழில் வாய்ப்பு இன்றி இருந்தால் என்னை அணுகினால் உங்களுக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருக்கின்றேன்.கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக கல்முனைகாவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இந்து ஆலயங்களில் உண்டியல் திருட்டு ,ஒலி பெருக்கி, சைக்கிள் ,திருடப்பட்டு வருகின்றன.இதில் எனக்கு சவாலாக அமைந்துள்ளது யாதெனில் மேற்குறித்த சம்பவங்களில் அநேகமாக கைது செய்யப்படுவது இளைஞர்கள் தான்.எனவெ இவ்வாறு கைதாகும் இளைஞர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் திருந்தி வாழ ஆசைப்பட்டால் அவர்களுக்கு எதுவித தொழில் வாய்ப்பு இன்றி என்னை அணுகினால் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பேன்.