195
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட திருநெல்வேலி இந்து மயானம் உரிய பராமரிப்புக்கள் இன்றி காணப்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதேவேளை இது தொடர்பில் பிரதேச சபை விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் அமைந்துள்ள திருநெல்வேலி இந்து மாயனத்தை சுற்றி சுற்று மதில் கட்டப்பட்டு மதிலின் மேல் முட்கம்பி வேலிகள் அடிக்கப்பட்டு உள்ள போதிலும் அவற்றை சேதமாக்கி விஷமிகள் உள் நுழைவதாகவும் , மயானத்தின் வாசல் கதவுக்கு போடப்படும் பூட்டினை உடைந்தும் உள்நுழைந்து விஷமிகள் மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த நீர் குழாய்களை உடைத்து சேதமாக்கி உள்ளதுடன் மின் இணைப்புக்களையும் சேதமாக்கியுள்ளனர். இது தொடர்பில் பிரதேச சபை விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
அதேவேளை எரிமேடை மற்றும் எரி கொட்டைகைகள் (சடலம் எரியூட்டப்படும் இடம்) என்பவற்றை புனரமைப்பு செய்ய வேண்டும் எனவும் , அவை மிக மோசமாக சேதமடைந்த நிலையில் காணப்படுவதாகவும், மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோட முடியாது எரி மேடையை சுற்றி வெள்ளம் தேங்கி நிற்பதனால் சடலங்களை எரியூட்ட முடியாத நிலைமைகள் காணப்படுவதாகவும் , சடலங்கள் எரிந்து கொண்டு இருக்கும் போது மழை வந்தால் பல சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் அதனால் அவற்றை விரைந்து புனரமைப்பு செய்து தர வேண்டும் எனவும் கோரியுள்ளனர். #பராமரிப்பின்றி #திருநெல்வேலி #இந்துமயானம் #நல்லூர்
Spread the love